செவ்வாய், 30 ஜனவரி, 2018

உதயோவியங்கள்



ஓவியமோ, மொழியறிவுக்கப்பால் விழியறிவை விரித்துரைக்கும் கவித்துவம். ஓவியன் கவிதை எழுதுவதும் கவிஞன் ஓவியம் வரைவதும் கலைக்குத் தேவையான பரிணாம வளர்ச்சி.






ஓவியங்கள் மீதான ஆர்வமும் தேடலும் சின்னஞ்சிறு பிள்ளைதொட்டு எல்லோருக்கும் இருப்பதை உணரலாம். எழுத்தின் வழியே உலகத்தை அறிந்ததும் உலகத்திற்கு அறிவித்ததும் இதயத்தின் இயல்பான நடையாகும். எழுதத் தெரிந்த காலம் முதல் எதுகை மோனைக்கு ஏற்றபடி கற்றுக்கொண்டதும் வாசிப்பவர் நேசிக்கும்படி வார்த்தைகளை வார்க்கத் தெரிந்ததும் இதுவரை என்னை ஓரளவுக்கேனும் உயர்த்திக் காட்டியிருக்கிறது. 











ஓவியம் - வாசிப்பின் அயற்சியின்றி அதைப் படைத்தளித்தவனின் எண்ணக்கருத்தைப் புரிய முடிந்த எளிய ஊடகம். ஒரு கவிஞனின் காந்த மனம் தானெண்ணியதை எத்துணை இலகுவாய் இயம்ப முடியுமென்பதில் எப்போதும் ஊக்கத்தோடு ஆக்கங்காணும். மொழியை வழிசெய்யும் மேதைமைக்கு அது உதவியாய் இருப்பதாக அவன் தன்னை ஆற்றுப்படுத்தி போற்றுவான். 




9 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. இந்தப் பக்கத்தைப் பார்த்தவர்கள் எண்ணிக்கை 95. ஆனால் இதை முகநூலில் பார்த்ததாக விரும்பியவர்கள் எண்ணிக்கை 7 .

      ஹாஹாஹா Fraud பயலுக

      நீக்கு
  2. பல வெப்சைட்ல பார்த்தப்போகூட நிர்வாணத்தை இப்படி ரசிச்சதில்லை. 😜
    என்னையே ரசிக்க வைச்சுட்டியேய்யா.😍

    (முக்கிய குறிப்பு) 14 வயசு பையன் நான் இங்க வந்து பார்த்ததாக வீட்டில் சொல்லிபுடாதீக. அடி பின்னிடுவாங்க. 😢

    பதிலளிநீக்கு