
அடேய்
அவசரக்காரா!
உன்
ஆனந்தப்பாய்ச்சலை மட்டுப்படுத்து.
முதலில்
என் தேவைகள் அறி!
என் நெற்றி
கன்னம்
கைகள்
கால்களுக்கும்
உன் சேவைகள்
தேவைப்படும் என்பதை
ஏன் அறியாமலிருக்கிறாய்?
பிறப்புறுப்புகளுக்கு மட்டும்தான்
பேரின்ப வாய்ப்பா?
கலவியின் கல்வி
கற்றுக்கொள்ளடா கள்வா!
பெண்ணங்கம்
ஒவ்வொன்றும்
பேரின்பக் கடல்!
தெரியுமா?
விரல்களால்
உடலெங்கும்
விளையாடு!
இதழ்களை
இப்படியா பறிப்பது?
வண்டு தான்
உனக்கு
வகுப்பெடுக்க வேண்டும்! போ!
உலை கொதிக்குமுன்
அரிசியைக் கொட்டிவிடாதே!
மெல்ல
மெல்ல
சூடேற்று!
மேனியில்
மேனியை
ஈடேற்று!
பெண்பற்று
பின்பற்று!
கக்கத்திற்கும்
கனகவாசமுண்டு.
நுரையீரல் முழுக்க
என் வாசம் நிறை!
எல்லாத் திசுக்களுக்கும்
உணர்வேற்றிவிட்டு புணர்!
என்னிடம் எடுத்த
தேன் போதையில்
என்னூற்றில்
தேனூற்று!
❤❤ mass mama😍
பதிலளிநீக்கு❤❤ mass mama😍
பதிலளிநீக்கு