இதுகாறும் வாழ்வின் வாதைகளைக் கடந்துவர கற்றதெல்லாம் இனிவரும் நாட்களுக்கு நம்பிக்கை பாதை சமைத்து நடக்கச் சொல்லித் தரும்.
எதிர்படும் எவற்றோடும் எதிர்மறை பார்வையோடு அணுகி அணுக்கம் கொள்ள எண்ணியதில்லை. வருவதெல்லாம் ஏதோவொன்றைக் கற்க, கற்பிக்கத்தான் என்ற அறிவூக்கவெளி கொடுத்து அரவணைப்பை அள்ளித்தரும்!
இந்த வாழ்வை இங்குற்றோரைவிட ஓரங்குலமேனும் ஓர்ந்திருந்து உவகை கொண்டுவிட வேண்டுமென்ற தவிப்பு நெடுநாளாய் நெஞ்சுக்குள் நீட்டிப் படுத்துக் கிடக்கிறது...
புரவிபோலொரு இளைப்பேறிய பொருளீட்டோட்டத்தின் நடுவே நிழற்சாலை தேடியமர எப்போதும் ஏங்கிவிடாததொரு தன்மையோடு வேருக்குள் விழுதுகட்டிவிட வேலை பார்க்க நினைப்பதுண்டு. 😍
- வள்ளுவக்குமரன் உதய்
14-03-2017

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக