நகம்!
வெட்ட வெட்ட
வீற்றிக்கொள்ளும்
விரல்களின் கிரீடம்!
அனிச்ச
விரலேந்திய
ஆயுதங்கள்!
அரிக்குமிடங்களில்
அங்கலாய்க்கும்
அருமருந்து!
சிலருக்கு
சிந்தனைப்பொழுதின்
சிறுதீனி!
சிலருக்கு
சித்திரம் வரைய
தருமேனி!
சமையற்களத்தில்
வெங்காயம்
உரிக்கும்
அரிவாள்!
சமர்க்களத்தில்
வெங் காயம்
விரிக்கும்
சிறுவாள்!
காதற்தளத்தில்
பின்கழுத்திலூறும்
குறுந்தேள்!
கலவிக்குளத்தில்
கண்டுபிடிக்கும்
நண்டு பிடிக்கும்
தூண்டிற்கோல்!
வளர்ப்போம்
நகம்!
அளப்போம்
நற்சுகம்! 😍😋☺
வெட்ட வெட்ட
வீற்றிக்கொள்ளும்
விரல்களின் கிரீடம்!
அனிச்ச
விரலேந்திய
ஆயுதங்கள்!
அரிக்குமிடங்களில்
அங்கலாய்க்கும்
அருமருந்து!
சிலருக்கு
சிந்தனைப்பொழுதின்
சிறுதீனி!
சிலருக்கு
சித்திரம் வரைய
தருமேனி!
சமையற்களத்தில்
வெங்காயம்
உரிக்கும்
அரிவாள்!
சமர்க்களத்தில்
வெங் காயம்
விரிக்கும்
சிறுவாள்!
காதற்தளத்தில்
பின்கழுத்திலூறும்
குறுந்தேள்!
கலவிக்குளத்தில்
கண்டுபிடிக்கும்
நண்டு பிடிக்கும்
தூண்டிற்கோல்!
வளர்ப்போம்
நகம்!
அளப்போம்
நற்சுகம்! 😍😋☺
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக